ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் நேற்று(12) சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சர்கள் மூன்று நிக்காயக்களினதும் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
அரசாங்கம் ஒன்றின் அமைச்சரவை நியமிக்கப்பட்டு அரச தலைவருடன் மூன்று நிக்காயவினதும் மகாநாயக்க தேரர்களை அத்தினமே சந்தித்தது முதல் தடவையாக இது அரசியல் வரலாற்றில் பதியப்படுகின்றது.
நேற்று பிற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு மல்வத்து மகாநாயக்க சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல, அனுநாயக்க தேரர்களான சங்கைக்குரிய நியங்ககொட விஜித்தசிறி. சங்கைக்குரிய திம்பல்கும்புரே விமலதம்ம, லேக்ககாதிகாரி சங்கைக்குரிய பஹமுனே சிறிசுமங்கல தேரர் உள்ளிட்ட காரக்க சங்க சபையின் மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வாதம் வழங்கினர்.