Tuesday, December 6, 2022

சொத்து விபரங்களை வெளியீடுமாறு வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Must Read

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்குள் தங்களது சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு முன்பாக தங்களது சொத்துவிபரங்களை கையளிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img