77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையதினம் (பெப். 4 )சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை காண உறவினர்களுக்குவிசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாளையதினம் (பெப். 04) கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 77 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மேற்படி கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேடஅனுமதி வழங்கப்பட உள்ளது. அதற்கமைய உரிய பாதுகாப்புகளுடன் திறந்தமுறையில் சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாகவே கைதிகளை காணஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளை பார்வையிட வரும் உறவினர்கள் உணவு, இனிப்பு மற்றும் சுகாதாரபொருட்கள் ஆகியவற்றை ஒருவருக்கு தகுந்த அளவில் மாத்திரம் கொண்டுவரஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சிறைச்சாலைகளிலும்பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார விதி முறைகளுக்கமைய கைதிகளைகாண்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.