Thursday, December 1, 2022

சந்திரகாந்தன் (பிள்ளையான்) எம்பி உட்பட ஐவர் பிணையில் விடுதலை

Must Read

‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கம் எம்பி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளாக விளக்கமறியலில் இருந்த பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்பி உட்பட ஐவர் இன்று (24) பிணையில் விடுதலை.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் பிணை வழங்க சட்டமா அதிபர் ஒப்புதல் வழங்கியதன் அடிப்படையில் பிள்ளையானுக்கு இரண்டு சரீரப்பிணைகள் மற்றும் வெளிநாடு செல்லத் தடை ஆகிய நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சராக இருந்த பிள்ளையான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் எனும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தரான எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img