Thursday, December 1, 2022

கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Must Read

யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ் கோப்பாய் பூதர்மடம் சந்தியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் இன்று (16) காலை வழக்கம் போல திறக்கப்படவில்லை. அலுவலக பணியாளர்கள் அனைவரும் வீதியிலேயே காத்திருந்தனர்.

இரவு நேரக் காவலாளி வழக்கம் போல அதிகாலையிலேயே கதவை திறந்து, காலையில் கடமையை கையளிப்பது வழக்கம்.இன்று அவரை காணவில்லையென்றதும், கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிசார் நடத்திய சோதனையில், பூட்டப்பட்ட அலுவலகத்தின் உள்ளே காவலாளி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சி.ரகுநாதன் (53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாமென முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img