கொரோனா வைரஸ் அதி ஆபத்து வலயமாக உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தீவிர கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்தப் பகுதியில் அமுலாகின்றன.
நேற்று வரை ஆபத்துக் குறைந்த பகுதிக்கான பச்சை வர்ணத்தில் குறிக்கப்பட்டிருந்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவு கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையிலேயே அதி ஆபத்து சிவப்பு வலயமாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது