இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று ( November – 10) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர்களின் விபரம்,
கொழும்பு – ராஜகிரிய முதியோர் இல்லத்தை சேர்ந்த 51 வயது ஆண், இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
கொழும்பு 10ஐ சேர்ந்த 45 வயது ஆண், இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணித்தார்.
கம்பஹா – உடஹமுல்லவை சேர்ந்த 63 வயது பெண், இவர் கம்பஹா வைத்தியசாலையில் மரணித்தார்.
அடையாளம் காணப்படாத 55 – 60 வயது மதிக்கத்தக்க ஆண்.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 40 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.