Tuesday, December 6, 2022

கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் போகம்பரை சிறையில்

Must Read

கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்வதற்கு முற்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மூன்று கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தப்பியோடியுள்ளார்.

போகம்பரைச் சிறைச்சாலையில் இந்தச் சம்பவம் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இங்குள்ள ஐந்து கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்டனர். ஐந்து பேர் தப்பிச் செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தப்பிச் செல்ல முற்பட்ட ஏனைய மூவர் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img