யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்கின்றது அதன்அறிக்கையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தமக்குதொடர்ந்தும் சிக்கல்கள் இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றைமுன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி,
”ஆளும் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களினதுநாடளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியபொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உள்ளது. அதற்கானநடவடிக்கையை சஜித் பிரேமதாச எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து இங்குவந்தது மேலே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீடு செல்வதற்கு இல்லை. தனக்குஉரையாற்றச் சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் நாடாளுமன்றம் வந்தும் பயனற்றநிலைமை உள்ளது.” என்றார்.
இதன்போது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்தகருணாதிலக்க, இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர்உள்ளிட்டோருடன் கலந்துரையாடி இருப்பதாகவும், இந்த விடயத்தில்சபாநாயகரின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தலை சபாநாயகர் வழங்கியபோதும், அதற்கானநடவடிக்கையை சஜித் பிரேமதாச எடுக்கவில்லை எனவும் அர்ச்சுனா எம்.பிகுற்றம் சுமத்தினார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன, ”எதிர்க்கட்சி பிரதமகொறடாவுக்கு தொடர்பில் உரிய கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்க விசேடகுழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்