பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ளபிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக நாளை நள்ளிரவு 12 மணி முதல்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரவு நேரத்தில் ஏற்படுகின்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களுடன்தொடர்புடைய கடமைகளிலிருந்து விலகுவதாக அறிவித்து , பொது நிர்வாகஅமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் உள்ள அலுவலகங்களைமூடுதல், ஒருவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட இடத்திலிருந்து அலுவலகப்பணிகளை மேற்கொள்வது மற்றும் நண்பகல் 1 மணிவரை மட்டுமேஅலுவலகத்தில் சேவையில் ஈடுபடுவது போன்ற நோக்கங்களை கொண்டுஇத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்விடயங்கள் தொடர்பாக தீர்வுகள் கிடைக்கும் வரை தொடர்ந்தும்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள்சங்கம் தெரிவித்துள்ளது.