நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் கைது இச் சம்பவம் நேற்று முன்தினம் (ஜீன் 17) இடம் பெற்றது
நெடுந்தீவு திருத்த பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திச்செல்லவுள்ளதாக நெடுந்தீவிலிருந்து தீவக சிவில் சமூக உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் தகவல் வழங்கப்பட்டிருந்தது . உடனடியாக கடற்படை மற்றும் ஊர்காவற்துறை பொலிசாருக்கு தீவக சிவில் சமூகத்தினரால் தகவல் வழங்கப்பட்டது .
அதற்கமைய புங்குடுதீவு மடத்துவெளி சோதனைசாவடியில் மேற்படி வாகனம் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட இறைச்சி கைப்பற்றப்பட்டதோடு இரு நபர்களும் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்
வாகனசாரதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் நெடுந்தீவு பகுதியில் மாடு மற்றும் ஆடுகளை இறைச்சியாக்கியவர்கள் யார் என்ற விசாரணைகள் தொடர்கின்றன
அண்மைக்காலங்களாக நெடுந்தீவில் கால்நடைகள் களவு போகின்ற நிலமை காணப்படுகின்றது இது குறித்த பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகள் செய்யப்படுகின்ற போதும் தீர்வுகள் கிடைப்பதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்