2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூலவாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு முக்கியஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரசஊழியர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிநள்ளிரவு 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள்அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளல் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின்உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து ( www.election.gov.lk ) பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போதுஅதற்குரிய தகவல்கள் 2024 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேருநர்இடாப்பிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வேண்டும்.
2024 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்புத் தகவல்களைபெற்றுக்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வஇணையத்தளத்திற்குள் பிரவேசிக்கலாம்.
அது தவிர, மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள், உள்ளூர்அதிகாரசபைகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள்ஆகியவற்றிலிருந்தும் 2024 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேருநர்இடாப்புத் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுமேலும் தெரிவித்துள்ளது.