கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவரினால் இவ்வாறு ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய நிலையில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த கொரோனா நோயாளி, உனவட்டுன உப ரயில் நிலைய பொறுப்பதிகாரியுடன் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார். இதனை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரை 14 நாட்கள் சுயதனிமைப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.