நாளை முதல் மறு அறிவித்தல் வரை உடுவில் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் யாவும் மறு அறிவித்தவல் வரை மூடப்படுகின்றது என வடமாகண ஆளுனர் அவர்கள் தெரிவித்துள்ளார் அந்த வகையில் இது தொடர்பாக வடமாகான கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் உடுவில் கோட்டபாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதுடன் உடுவில் பிரதேசத்தில் வாழ்கின்ற ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்கின்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க தேவையில்லை எனவும் அதே நேரம் வேறு வலயங்களில் கல்வி கற்பிக்கின்றவர்கள் கடந்த நாட்களில் உடுவில் பிரதேசத்தில் உறவினர்கள் வீடுகளிற்கு சென்று வந்திருப்பின் அவர்களும் பாடசலைக்க சமுகமளிப்பதை தவிர்க்குமாறும் இது தொடர்பாக பாடசாலை அதிபர்கள் முடிவினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.