வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று(நவ.,25) இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும். புயலின் தாக்கம், இன்றிரவு முதல் அதிகரிக்கும். 6 கி.மீ., வேகத்தில் நகரும் ‘நிவர்’ புயல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும்.