அனைத்து இன மக்களும் எம்மீது நம்பிக்கை கொண்டு அதிகாரத்தைவழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள்என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாட்டில் இனிஇனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார்.
மக்களால் வெறுக்கப்படும் பாராளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் பாராளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்கமுடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்தபாராளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும்ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்றுஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்துபாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும்ஜனாதிபதி கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கானநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போதுதெரிவித்தார்.
இரு தரப்பு கடன் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதான கடன்வழங்குநர் நாடுகளுடன் பிரத்தியேக ஒப்பந்தம் வெகுவிரைவில்கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்தஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க கூறினார்.