இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைக்கு அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த பணியாளர்கள் 21 பேரை சுட்டுக் கொன்றனர்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எக்ஸ்ரே பிரிவில் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவு கூரப்பட்டது. குறித்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்கள் தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
1987 ஆம் ஆண்டு யாழில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடைமையில் இருந்த பணியாளர்கள் 21 பேர் வைத்தியசாலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது