Thursday, December 1, 2022

இந்தியாவிற்கு சென்று மீண்டும் திரும்பி வந்தவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளார்

Must Read

யாழ்ப்பாணத்திலிருந்து படகொன்றில் இந்தியாவிற்கு சென்று மீண்டும் திரும்பி வந்தவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளார். இந்தியாவிலிருந்து திரும்கி வரும்போது அவரது படகு பழுதடைந்து, தொண்டைமானாறு கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்தவரை கடற்படையினர் மீட்டனர்.

அச்சுவேலி, வளலாய் பகுதியை சேர்ந்த செல்வரட்ணம் செல்வதாஸ் (35) என்பவரே சிக்கினார். கடந்த வெள்ளிக்கிழமை இவர் படகொன்றில் இந்தியா சென்றுள்ளார். பின்னர் சனிக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டு இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன்போது அவரது படகு பழுதடைந்துள்ளது.

கடலில் தத்தளித்து கொண்டிருந்தவரை கடற்படையினர் மீட்டனர். அவர் அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி, பிசிஆர் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img