இன்று (ஜீலை 24) மாலை பொருட்கள் மற்றும் பயணிகளுடன் மாலை குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்க படகான சமூத்திரதேவா டீசல் பைப் உடைந்து பழுதடைந்து பின்னர் குழுதினி படகின் உதவியுடன் மீண்டும் குறிகட்டுவான் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்காலிகமாக திருத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பாக நெடுந்தீவுக் கரையினை வந்தடைந்துள்ளது.
இது தொடர்பாக பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினரை தொடர்பு கொண்ட போது உடனடியாக நாளைய தினமே திருத்தம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாளை மறுதினம் சமுத்திரதேவா சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்து என்பது பலதரப்பட்ட இடங்களில் பல முறை பேசப்பட்டாலும் சரியான தீர்வு இது வரை கிடைக்பெறவில்லை தற்போது வடதாரகை பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது நெடுந்தாரகையின் சேவை மக்களுக்கு பூரணமாக கிடைப்பதில்லை குமுதினிப் படகு போன்ற படகே எமது தீவகத்திற்கு சிறந்த பயணிகள் போக்குவரத்து இதுவே நெடுந்தீவு மக்களது கருத்தாகவும் காணப்படுகின்றது